சுற்றுலா கூடாரம் சீரமைக்க கோரிக்கை

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக காளிகேசம் விளங்குகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். காளிகேசம் செல்ல வாழயத்து வயல் வனத்துறை சோதனை சாவடி வழியாகத்தான் சுற்றுலா பயணிகள் செல்ல முடியும். அதேபோல் இந்த சோதனைச் சாவடியில் சுற்றுலா வரும் பயணிகள் உணவருந்தி, ஓய்வெடுக்கும் வகையில் வனத்துறையால் கட்டப்பட்டுள்ள கூடாரம் உள்ளது. இது அனைத்தும் தற்போது பெயர்ந்து காணப்படுவதால் மழை காலங்களில் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள் பெயர்ந்த கூடாரங்களை சரிசெய்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story

