நடமாடும் பாஸ்போர்ட் சேவா வாகன முகாம் தொடக்கம் !

நடமாடும் பாஸ்போர்ட் சேவா வாகன முகாம் தொடக்கம் !
X
வேளாண் பல்கலையில் பாஸ்போர்ட் சேவா முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவா வாகன முகாம் நேற்று தொடங்கியது. இவ்விழாவை டெல்லி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவா திட்ட இயக்குநர் கோவேந்தன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சித்துறை இயக்குநர் ரவீந்திரன், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 250 விண்ணப்பதாரர்கள் பயன் பெறவுள்ளனர். வரவேற்பை பொறுத்து முகாம் நீட்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story