மாநகர எல்லைகளுக்குள் ஊர்வலத் தடை – அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு !

ஊர்வலம், தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்ட தடைக்கு கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பு.
கோவை, மாநகர எல்லைகளுக்குள் ஊர்வலங்கள், தெருமுனை கூட்டங்கள், அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்த தடை விதித்த காவல்துறை புதிய வழிகாட்டுதலுக்கு, அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நேற்று கோவை காந்திபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் எக்ஸ் எம்.எல்.ஏ தலைமையேற்றார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, காவல்துறை வெளியிட்ட புதிய நெறிமுறைகள் ஜனநாயக உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டினர். இதற்கான தீர்வை பெற, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அனைத்துக் கட்சிகளும் கலந்துரையாட முடிவு செய்துள்ளன.
Next Story