பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல்: வாலிபர் மீது தாக்குதல் !

X
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டார். கோவை பெரிய கடைவீதி கே.சி. தோட்டத்தைச் சேர்ந்த ரூபாஷ் (18), நண்பர் சூர்யாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது மலர்வேல் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மலர்வேல் தனது நண்பர்கள் சக்திவேல், நிரஞ்சன், ஹரி மாதவன் ஆகியோருடன் ரூபாஷ் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ரூபாஷ் அளித்த புகாரின் பேரில் பெரிய கடைவீதி போலீசார் நால்வருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story

