காங்கேயத்தில் பைக் அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பலி - சிசிடிவி காட்சிகள் வைரல்

காங்கேயத்தில் பைக் அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி பலி - சிசிடிவி காட்சிகள் வைரல்
X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கரூர் சாலையில் பேக்கரி கடையில் இருந்து சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி. சிசிடிவி காட்சிகள் வைரல்
திருப்பூர் வன் சிவரம் புதூர் அருகே எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுப்பிரமணி (50) என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கூலி தொழில் செய்து வருகிறார். இன்று காலை காங்கேயம் கரூர் சாலை முத்தூர் ரோடு பிரிவு அருகே பேக்கரியில் இருந்து பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது காங்கேயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டு சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சடலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story