திருக்குறள் முற்றோதல் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

திருக்குறள் முற்றோதல் ஆதீனத்தின் தலைமையில் 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் உலகப் பிரசித்தி பெற்ற சித்தம்பலம் நவகிரக கோட்டையில் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து திருக்குறளை மேம்படுத்துதல் மாணவ மாணவிகளுக்கு வாழ்வியலை திருக்குறளை ஒன்றி வாழ வைத்தல் நோக்கத்தில் முற்றோதல் நடைபெற்று வருகிறது தனியார் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் யாழி இந்துமதி ஏற்பாட்டில் காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமையில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுக் கூட்டாக திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வாழ்வியலை திருக்குறள் வழியில் கொண்டு செல்வதற்கான பயிற்சியாக நடைபெற்று வருகிறது.பொதுவாக தேவாரம் திருவாசகம் எல்லாம் முற்றோதல் நிகழ்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் திருக்குறளை முற்றுதல் நிகழ்ச்சியாக ஏற்படுத்தி தற்போது ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் அளவிற்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
Next Story