கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது முகநூலில் அவதூறு புகார்-மக்கள் தொடர்பு அலுவலர் காவல் நிலையத்தில் புகார்.

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது முகநூலில் அவதூறு புகார்-மக்கள் தொடர்பு அலுவலர் காவல் நிலையத்தில் புகார்.
கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மீது முகநூலில் அவதூறு புகார்-மக்கள் தொடர்பு அலுவலர் காவல் நிலையத்தில் புகார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக செந்தில்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட விரும்பத் தகாத சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் அடையாளம் தெரியாத நபர் பதிவு செய்துள்ளதாக கூறி கரூர் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அக்டோபர் 2-ம் தேதி வியாழக்கிழமை அன்று மதியம் மூன்று மணி அளவில் கரூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story