புதுக்கோட்டை நகர் பகுதியில் கனமழை!
புதுக்கோட்டையில் காலை முதல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து நல்ல மழை பெய்ய தொடங்கி இடி மின்னலுடன் கனமழையாக பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டுப்பட்டி பெரியார் நகர், திருக்கோகர்ணம், காமராஜபுரம், மேலராஜவீதி,கீழ ராஜ வீதி, ஆகிய நாகர்ப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இந்த மழையினால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
Next Story



