கரூரில் விசாரணை இப்போதுதான் துவங்கி உள்ளது விசாரணை விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன்.ஐஜி அஸ்ரா கார்க் கரூரில் பேட்டி.
கரூரில் விசாரணை இப்போதுதான் துவங்கி உள்ளது விசாரணை விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன்.ஐஜி அஸ்ரா கார்க் கரூரில் பேட்டி. கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரனை ஒப்படைக்கபட்டது. அதன் அடிப்படையில் இன்று கரூர் வந்து சேர்ந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்பவம் நடந்த இடம், கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்பவ இடத்தில் மின் விளக்கு ஜெனரேட்டர் அமைத்தவர் என தொடர்ச்சியாக விசாரிக்க உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த ஐஜி அஸ்ரா கார்க், முதற்கட்ட விசாரணை இப்போதுதான் தொடங்கி உள்ளது. 2 எஸ்பிகள், 1 ஏ டி எஸ் பி ,இரண்டு டிஎஸ்பி, ஐந்து ஆய்வாளர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது. விசாரணை விவரங்களை மேற்கொண்டு நானே சொல்கிறேன் என்றார்.
Next Story





