சாலையில் மழை காரணமாக விழுந்த பனை மரம் மீது டூவீலர் மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலி

சாலையில் மழை காரணமாக விழுந்த பனை மரம் மீது டூவீலர் மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலி
X
குமாரபாளையம் அருகே சாலையில் மழை காரணமாக விழுந்த பனை மரம் மீது டூவீலர் மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் ஜம்பை பகுதியில் வசித்து வந்தவர் காயத்ரி, 29. தனியார் வங்கி பணியாளர். இவர் நேற்று முன்தினம் இரவு 09:30 மணியளவில் தனது வெஸ்பா டூவீலரில், குமாரபாளையம் அருகே பாறையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது வழியில் பனை மரம் ஒன்று மழை பெய்ததால் சாலையில் விழுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல் வந்த காயத்ரி, அதன் மேல் மோத, நிலை தடுமாறி கீழே விழுந்தார் . இதனால் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்ததாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story