திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
X
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் செயல்படும் என்பதால் திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்த பின்னர் ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டது இன்றோடு விடுமுறைகள் முடிந்து நாளை வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என்பதால் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊருக்கு சென்றவர்கள் மற்றும் சொந்த ஊரிலிருந்து திருப்பூரில் பணிபுரியும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்த மாணவர்கள் என அனைவரும் மீண்டும் தங்கள் கல்வி பயிலும் இடத்திற்கு செல்ல ஆர்வம் காட்டினர் இதன் காரணமாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் செல்வதை காண முடிந்தது மேலும் திருப்பூரில் இருந்து கோவை தேனி திண்டுக்கல் திருவண்ணாமலை சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்றனர் அதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் திருப்பூரில் கல்வி பயிலும் மாணவர்கள் மீண்டும் திரும்பி வந்து நகரப் பேருந்துகள் மூலமாக தங்கள் பகுதிக்கு செல்ல முயன்றனர் இதனால் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிக அளவில் காணப்பட்டது.
Next Story