சி.பி.எம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

சி.பி.எம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு அக். 12ல் நாமக்கல்லில் நடக்கவுள்ளதையொட்டி, தெருமுனை பிரசார கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு அக். 12ல் நாமக்கல்லில் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதனை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நகர செயலர் கந்தசாமி தலைமையில் நடந்தது. விசைத்தறி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும், குமாரபாளையம் மக்களுக்கு புளியம்பட்டி கதவணையிலிருந்து தண்ணீர் எடுத்து தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு வீட்டுமனை இலவச பட்டாக்கள் வழங்க வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், குமாரபாளையம் பகுதியிலிருந்து நாமக்கல், திருச்சி வரை அரசு பேருந்து இயக்க வேண்டும், மைக்ரோ பைனான்ஸ், மகளிர் குழு கடன் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா, நடராஜா மண்டபங்களை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ஆர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல் முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம் நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், ஜனார்த்தனன், மாதேஸ், சண்முகம் மோகன் மற்றும் விசைதரி சங்க நகர செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த தெருமுனை பிரச்சார கூட்டம் பள்ளிபாளையம் சாலை, பஸ் ஸ்டாண்ட், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
Next Story