மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் வெயில் அதிகமாக இருந்தது. விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. வழக்கமான சாலையோர கடைகளை விட ஞாயிறன்று அதிக சாலையோர கடைகள் அமைப்பது வியாபாரிகளுக்கு வழக்கம். நேற்று மாலை 04:00 மணியளவில் கன மழை பெய்தது. இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மேலும் 07:00 மணிக்கு மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில், பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கோம்பு பள்ளத்தில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. . தீபாவளி நெருங்குவதால் அதிகமான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மழையால் இவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் பெய்த இந்த மழை யால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் கடும் மழையும் பெய்து வருகிறது. இதனால் பலருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது
Next Story