திருச்செங்கோட்டில்போதையில் போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர் பரபரப்பு வீடியோ வைரல்
Tiruchengode King 24x7 |5 Oct 2025 8:46 PM ISTதிருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் போதையில் மோட்டார் சைக்கிளில் வந்து சென்டர் மீடியினில் மோதி கீழே விழுந்தவரை தூக்கி விட சென்ற போக்குவரத்து முதல்நிலை காவலர் கந்தசாமியை தாக்கிய போதை ஆசாமி வீடியோ வைரல். சீருடையில் உள்ள போலீசை தகாத வார்த்தைகளில் பேசி போதை ஆசாமி தாக்கும் காட்சி வைரலாகிபரபரப்பு
திருச்செங்கோடு வாலரைகேட் நால்ரோடு பகுதியில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய போக்குவரத்து காவல்துறை முதல் நிலைக் காவலர் கந்தசாமி பணியில் இருந்தார் அப்போது இருசக்கர வாகனத்தில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருந்து தள்ளாடிபடியே வந்த ஒரு வாலிபர் சென்டர் மீடினில் மோதி கீழே விழுந்துள்ளார்.இதனைக் கண்ட போக்குவரத்து முதல் நிலை காவலர் கந்தசாமி கீழே விழுந்தவரை தூக்கிவிட சென்று தூக்க முயற்சித்த போது கீழே விழுந்து கிடந்த அந்த போதை ஆசாமி எழுந்து போக்குவரத்து காவலரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு தொடர்ந்து தாக்கவும் முயற்சித்து உள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவலருக்கு ஆதரவாக அந்த போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்துள்ளனர். தகவல் அறிந்த மற்ற போக்குவரத்து காவலர்கள், போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்து போக்குவரத்து காவலரை தாக்க முயற்சித்த அந்த நபர் குறித்து நகரபோலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக அவர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சுமார் 25 வயது என்பதும் அவர் அதிகமான மது போதையில் கொக்கராயன் பேட்டை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கீழே விழுந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவலரையே தாக்க முயற்சிக்கும் போதை ஆசாமியின் செயல் பொதுமக்களிடையேபரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
Next Story




