கேரளா மாணவன் தாக்கப்பட்டது குறித்து எஸ்.பி-யிடம் புகார் மனு

கேரளா மாணவன் தாக்கப்பட்டது குறித்து எஸ்.பி-யிடம் புகார் மனு
X
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரளா மாணவன் தாக்கப்பட்டது குறித்து கொடைக்கானல் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப்பூ உசேன். இவர் இந்திய ஆயில் நிறுவனத்தின் பணி செய்து வருகின்றார்.அவரது மகன் அமீர், அதே மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி மாணவர் அமீர் தந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு வழங்குவதற்காக வந்தனர். அங்கு அவர்கள் அளித்த பேட்டியில், கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி கொடைக்கானலை சுற்றிப் பார்ப்பதற்காக அமீர் மலப்புரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் சென்றதாகவும், கொடைக்கானல் நகர் பகுதியில் தங்கி விட்டு 29ஆம் தேதி பூண்டி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதாகவும், இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றிய நிலையில் லாரி உரிமையாளர் முருகன் மற்றும் சிலர் அமீரை தாக்கியதாக, கொடைக்கானல் காவல் நிலையத்தில் அமீர் புகார் வழங்கினர். அப்போது அங்கிருந்த எஸ்ஐ செல்வா வழக்கு பதிய வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியதாகவும், இதையடுத்து கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பிறகு ஆய்வாளர் பாஸ்கரன் சி எஸ் ஆர் மற்றும் பதிவு செய்து தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை லாரி உரிமையாளர்தன்னை தாக்கும் பொழுதே, நாங்கள் இப்பகுதியில் மிகப்பெரிய ரவுடி காவல்துறையினர் எங்கள் லுடன் இருக்கின்றன உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதாகவும், அதற்கு ஏற்றார் போல் காவல்துறையினரும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் காவல்துறை மீதும் தன்னை தாக்கிய நபர்கள் மீதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிப்பதற்கு வந்துள்ளோம் என்று கூறினார்.
Next Story