ரயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

ரயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி
X
திண்டுக்கல் அருகே ரயில் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அடுத்த அங்கம்மாள் நகர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வரும் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் சக்திவேல்(39) என்பவர் சென்னையில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பழனியாண்டவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சுமார் 100 மீட்டர் தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டு உடல் துண்டாகி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story