ஆலங்குளத்தில் பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் நாராயணன் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா(32). அடைக்கலபட்டணத்தில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் வேலை செய்து வந்தாா். வேலை முடிந்து ஆலங்குளம் - தென்காசி சாலை வட்டாலூா் அருகே வீட்டிற்குச் செல்வதற்காக நடந்து சென்ற போது, பின்னால் வந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்கும் போலீஸாா் இசக்கிமுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, பைக் ஓட்டுநா் தென்காசி கீழப்புலியூா் சாகுல் ஹமீது மகன் மைதீன் (52) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Next Story

