தாராபுரத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

X
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்று கட்சியிலிருந்து விலகி சுமார் 55 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கொண்டனர். அதே போல் தாராபுரம் நகரப் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்றக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ராசி முத்துக்குமார், பிரபாவதி பெரியசாமி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கணேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Next Story

