திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
X
காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவையொட்டி திருச்செந்தூர் திருக்கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் குவிந்தனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை நிறைவையொட்டி திருச்செந்தூர் திருக்கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த செப். 27ஆம் தேதி தொடங்கிய விடுமுறை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால், திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. ரெயில், பஸ் நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story