புதுக்கோட்டை: ஓடும் பேருந்தில் நகை திருட்டு!

X
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே சாக்கோட்டையை சேர்ந்த பொரினாபேகம் (45) என்பவர் நேற்று அறந்தாங்கியில் இருந்து சாக்கோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தார். அறந்தாங்கி அருகே பச்சலூர் சோதனைசாவடி பகுதியில் பேருந்து சென்றபோது அவர் பையில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் திருடு போனதாக சத்தம் எழுப்பினார். பின் பேருந்த நிறுத்தி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசில் அவர் புகார் அளித்தார்.
Next Story

