காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

தர்மபுரி மேற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
தர்மபுரி மேற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் சார்பில் பிஜேபி மின் வாக்கு திருட்டு என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சி நடத்தும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது தர்மபுரி மேற்கு மாவட்ட தலைவர் தமிழ்வாணன் வரவேற்புரை ஆற்றினார். தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வைத்தனர். சம்பத்குமார் .நரேந்திரன். ராஜப்பா .தினேஷ்குமார் .முன்னிலை வைத்தனர் .சிறப்புரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை மாநில தலைவர் சஞ்சய் குமார். மாநில துணை செயலாளர் விஜய் சேகர் .ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் மோகன் .மாநில பொதுக்குழு செயலாளர் காளியம்மாள். ஐ என் டி யு சி மண்டல செயலாளர் தங்கவேல். இளைஞர் காங்கிரஸ் தர்மபுரி மாவட்ட தலைவர் வெற்றிவேந்தன் . குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே பிஜேபி மின் வாக்கு திருட்டு என்ற முழக்கத்துடன் கண்டித்து பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது தர்மபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் நபரிடம் கையெழுத்து வாங்கி தேர்தல் கமிஷனர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அனுப்பப்படும் என்று காங்கிரஸ் கட்சி கமிட்டி எஸ் சி சார்பில் மாநிலத் தலைவர் சஞ்சய் குமார் பேசினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story