நாகை நகரத்தில் இயங்கிய அரசு மருத்துவமனையை முன்புபோல் செயல்பட நடவடிக்கை

இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி அறப்போராட்டம் - நுகர்வோர் அமைப்பு எச்சரிக்கை
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கம், நாகப்பட்டினம் மாவட்ட வளர்ச்சி குழும தலைவருமான என்.பி.பாஸ்கரன், தமிழக முதல்வர், நாகை மாவட்ட ஆட்சியர், நாகை ஒரத்தூர் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகப்பட்டினம் நகரத்தில் புதிய பேருந்து நிலையம் எதிரில் சுமார் 110 ஆண்டு காலமாக இயக்கி வந்த அரசு மருத்துவமனை, பொதுமக்களுக்கு தெரியாமல் இரவுவோடு இரவு வாக ஒரத்தூருக்கு மாற்றி விட்டார்கள். இதனால், பொதுமக்களும், முதியவர்களும், குழந்தைகளும் படுகிற சிரமத்திற்கு அளவில்லை. எனவே, மீண்டும் நாகப்பட்டினம் நகரத்தில் ஏற்கெனவே இருந்த இடத்தில் சகல விதமான வசதிகளுடன் உடனடியாக மருத்துவமனை செயல் பட வேண்டும் என்று பொதுமக்கள் பல கட்ட போராட்டம் நடத்தி வந்தார் கள். இந்நிலையில், நாகை வந்த தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சரிடம், நாகப்பட்டினம் நகரத்தில் இருந்த அரசு மருத்துவமனையை மீண்டும் நாகைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் சம்மதித்தார். ஆனால் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, ஒரு ஆண்டு ஆகப்போகிறது. ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. நாகப்பட்டினம் நகரம் சுற்றிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகிறார்கள். நாகூரை சேர்ந்த ஒரு பெண், பனிக்குடம் உடைந்த நிலையில், தன் மகளை பிரசவத்திற்காக நேற்று இரவு நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லை என்று கூறிவிட்டார்கள். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கும் இரவு நேரத்தில் பிரசவம் பார்க்க மருந்துவர் இல்லை என்று கூறிவிட்டார்கள். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு கூட மருத்துவர் இல்லாததால் அந்த தாய் பட்ட வேதனை பற்றி சொல்லத் தேவையில்லை. எனவே. பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து பேசினோம். அப்போது அவர், உங்கள் கோரிக்கை குறித்து, அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், தமிழ்நாடு அரசு நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்ய பட்டு உள்ள மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைத்தும் நிரப்பப்படவில்லை. 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் 40 சதவீதம் தான் நிரப்பி உள்ளார் கள். இதனால் மருத்துவ கல்லூரி க்கே மருத்துவர்கள், பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள 100 சதவீதம் மருத்துவர்கள், இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்போது தான், நாகப்பட்டினம் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு யூனிட் மருத்துவர்கள், இதர பணியாளர்கள் ஒதுக்கீடு செய்ய முடியும். அப்போதுதான். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை ஏற்கனவே செயல் பட்டது போல செயல்பட முடியும். இல்லையென்றால், முன்புபோல பொதுமக்களை திரட்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டங்களில் ஈடுபடும் நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story