புதிய பாலத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

புதிய பாலத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
X
தூத்துக்குடி மீன்வள கல்லூரி செல்லும் பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை அமைச்சர் கீதா ஜீவன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்
தூத்துக்குடி மீன்வள கல்லூரி செல்லும் பாதையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை அமைச்சர் கீதா ஜீவன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் தூத்துக்குடி துறைமுக சாலை பகுதியில் அமைந்துள்ளது. தமிழக அரசின் மீன்வளக் கல்லூரி இந்த கல்லூரிக்கு செல்லும் பாதையில் மழைநீர் கால்வாய் மேல் இருந்த பாலம் கடந்த பெருமழையின் போது அடித்து செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் சென்று வந்தனர் இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14.60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன அந்த பணிகள் நிறைவு பற்றிய தொடர்ந்து அதை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு இந்த பாலத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு அர்பணித்தார் இது தொடர்ந்து ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர் அந்த பாலம் வழியாக கல்லூரிக்கு சென்றனர் மேலும் கல்லூரிக்கு வரக்கூடிய வாகனங்களும் இந்த பாலம் வழியாக சென்றன இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் இனிப்புகளை வழங்கினார் மேலும் அந்த பாலம் பகுதியில் தூர்வாரப்பட்ட கால்வாய்களையும் பார்வையிட்டார்.
Next Story