தேனி அருகே தடுப்புச்சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு

தேனி அருகே தடுப்புச்சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு
X
உயிரிழப்பு
போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (26). இவர் நேற்று (அக்.5) அப்பகுதியில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நிலையில் அவரது தந்தையை அழைப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலை தடுப்புச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு.
Next Story