கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு !

கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு !
X
சென்னை செல்லும் பயணத்திற்காக கோவை விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையம் வந்தடைந்த போது அங்கிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு பொன்னாடைகள், புத்தகங்கள், மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். அவற்றை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி விமான மூலம் சென்னை புறப்பட்டார்.
Next Story