சேரும் சகதியுமாக உள்ள சாலையை சீர் செய்ய கோரிக்கை

X
மதுரை சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் பல மாதங்களாக சேரும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்ய பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் . இந்த பகுதியில்தான் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அரசு பள்ளி முன்பு உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் பல மாதங்களாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
Next Story

