நாய் குறுக்கே வந்ததால் இளைஞர் பகுதி

நாய் குறுக்கே வந்ததால் இளைஞர் பகுதி
X
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்ற இளைஞர் பலியானார்.
மதுரை மாவட்டம் பேரையூர் கிழக்கு தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் செல்லப்பாண்டி (24) என்பவர் கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பேரையூர் சுப்புலாபுரம் சாலையில் பேரையூர் பழைய ஃபயர் ஒர்க்ஸ் ஆபீஸ் அருகே சென்று கொண்டிருந்த பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.5) காலை உயிரிழந்தார் .அவரது தந்தை பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story