பேருந்து மாயம் .போலீசார் விசாரணை

X
மதுரை மாவட்டம் மேலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சித்திக் என்பவர் நேற்று ( அக்.5) இரவு, ‘அழகர்மலையான்’ என்ற பெயர் கொண்ட தனியார் பேருந்தை நிறுத்தி சென்றுள்ளார் . இன்று அதிகாலை பெட்ரோல் பங்குக்கு வந்து பார்த்த போது பேருந்தை காணவில்லை. மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

