மதுரையில் ஐந்து கருட சேவை.

மதுரையில் ஐந்து கருட சேவை.
X
மதுரையில் நாளை இரவு 5 வருட சேவை நடைபெற உள்ளது.
மதுரை அருள்மிகு ஸ்ரீ மதுரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் பஞ்ச கருட சேவை நடைபெறும் இந்தாண்டு திருவிழா நாளை 07.10.2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 7 மணியளவில் ஐந்து கருட சேவை நடைபெறுகிறது ஐந்து கருட சேவையில் கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராசப்பெருமாள் மற்றும் கூடலழகரும் கருட வாகனத்திலும் மற்றும் மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து வீரராகவப் பெருமாளும் வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள உற்சவரான ரங்கநாதரும் மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோவிலிலிருந்து மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர்கோயில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் ஐந்து கருட சேவை புறப்பாடு நடைபெறுகிறது.
Next Story