நத்தம் அருகே கோர விபத்து மூளை சிதறி பலியான சிறுமி

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோட்டையூர் ஊராட்சி குரும்பபட்டியைச் சேர்ந்தவர் தொத்தக்காளை மகன் சின்னையா (வயது 60). இவரது மனைவி ரஞ்சிதம் (வயது 58), மற்றும் இவர்களின் மூத்த மகள் ராமு என்பவரின் குழந்தைகள் தாரணிகா (வயது 7), மௌனிகா (வயது (6) ஆகிய நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் திருமலைக்கேணி அருகே உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் குரும்பபட்டி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினி வேன் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் குழந்தை தாரணிகா தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் பலத்த காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சிறுமியின் உடல் உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய மினி வேன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடியவரை வடமதுரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கோர விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

