பெண்ணிடம் பணம் மற்றும் நகை கடனாக பெற்று மோசடி

X
திண்டுக்கல், முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் அருகில் உள்ள பெரியகோட்டையில் வசிக்கும் காமராஜ் மகன் மருதைவீரன், அவரது தங்கை லெட்சுமி மற்றும் தாயார் சின்னப்பொன்னு ஆகிய நபர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு ரூ.12,00,000/- (பனிரெண்டு லட்சம் மட்டும்) அவசர தேவைக்காக வெளியில் வாங்கி கொடுத்ததாகவும், 2 மாதங்களுக்கு பின் மேலும் ஒரு இடம் குறைந்த விலைக்கு வருகிறது அதை வாங்க வேண்டும் என்பதற்காக 10 பவுனும் நகையும் எனது மகளிடம் இருந்த 14 பவுன் நகையும் மொத்தம் 24 பவுன் நகையை கொடுத்தேன். பணம் மற்றும் நகையை பலமுறை வீட்டிற்கு சென்று கேட்டதற்கு இன்று நாளை என்று காலம் கடத்தி வந்தார்கள். மேலும் மருதைவீரன் என்பவர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருப்பதால் காங்கிரஸ் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் துரைமணிகண்டன் இடம் இது பற்றி கூறியதற்கு, பின், மணிகண்டன், மருதைவீரன் இணைந்து காங்கிரஸ்கட்சிக்கு அலுவலகத்திற்கு பணம் தருவதாக வர கூறி பணம் தரமுடியது, பணம் கேட்டால் கொலை செய்வோம் என்ற கொலை மிரட்டல் விடுத்தார். அதன் பின், வீட்டை அடித்து நொறுக்கியும் உன் கணவர், மகன், மகள் அனைவரையும் கொன்று விடுவோம் என்று அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்கள். எனவே, மருதைவீரன், அவரது தங்கை லெட்சுமி, தாயார் சின்ன பொன்னு உட்பட துரை மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் இடம் மனு அளித்துள்ளார்.
Next Story

