அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
2023 புதிய ஊதிய ஒப்பந்தத்தில் குறைக்கப்பட்ட வீடு வாடகை பணியினை உயர்த்தி வழங்க வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் விநியோகப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கண்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டும், மகளிர் பணி புரியும் இடங்களில் அவசிய கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று 06.10.25 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தங்களது 25 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவில்லை என்றால் வருகின்ற 07.10.25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
Next Story