கரூரில் நடந்த துயர சம்பவத்தை ஒரு தலைப்பட்சமாக பார்க்க கூடாது.மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

கரூரில் நடந்த துயர சம்பவத்தை ஒரு தலைப்பட்சமாக பார்க்க கூடாது.மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேட்டி.
கரூரில் நடந்த துயர சம்பவத்தை ஒரு தலைப்பட்சமாக பார்க்க கூடாது.மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேட்டி. கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் பரப்புரை மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜய் கரூருக்கு வந்தபோது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியினரும்,பல்வேறு சமுதாய அமைப்பினரும் நாள்தோறும் கரூருக்கு வருகை தந்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். இன்று கரூருக்கு வருகை தந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறையிடம் அனுமதி கேட்டு மறுக்கப்பட்ட லைட் ஹவுஸ் மற்றும் உழவர் சந்தை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமி புரத்திற்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பிறகு இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது,அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் அமராவதி நதி செல்வதால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்த கமலஹாசன்,உயிர் இழப்பதற்கு எந்த இடமும் சிறந்த இடம் கிடையாது என்றார். செய்தியாளர்கள் இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடு தான் என்று குற்றம் சாட்டப்படுகிறது என்று கேட்டபோது,யார் குற்றம் சாட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர்,நான் தமிழ்நாட்டின் குடிமகன்.அந்த வகையில் பார்க்கும்போது இந்த சம்பவத்தை நடுநிலையோடு பார்க்க வேண்டும்.இங்கே என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.எனவே ஒரு தலைப்பட்சமாக பேசாதீர்கள்.அப்படி பேசினால் பொதுமக்களும் அதே போல் பேச நேரிடும் என தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய்க்கு தங்களது ஆலோசனை என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து அங்கிருந்து சென்றார்.
Next Story