விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

X
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கயத்தாறு பகுதி விவசாயிகள் முற்றுகை அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மூவி சுந்தர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் கயத்தாறு வட்டத்தில் பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டு தொகை விரைவாக வழங்கிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா பகுதியில் கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் பருவமழை மாற்றத்தினால் ஏற்பட்ட கனமழையினால் பயிர்கள் முழுவதும் சேதமடைந்துவிட்டது, சேதமடைந்த பயிர்களை அரசு தரப்பில் பார்வையிட்டு அதற்கான உரிய நிவாரணங்களையும் விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். ஆனால் இதுவரை விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீடு தொகையை காப்பீட்டு தொகையோ வரவைக்கப்படவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story

