கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மாநில தொடக்கப் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெனிஸ்கர் தலைமையில் தூத்துக்குடி டுவிபுரத்தில், ஊதிய உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட கால முறை ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தியும், 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் ஆயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் நாளை முதல் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Next Story