நாமக்கல்லில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கினார்!

X
Namakkal King 24x7 |6 Oct 2025 8:16 PM ISTநாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 38 பேருக்கு இரண்டாம் பருவ விலையில்லா நோட்டு,புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்றது.செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட்டன. காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விலையில்லா நோட்டு, புத்தகங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி,நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்கினார்கள்.நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் 38 பேருக்கு இரண்டாம் பருவ விலையில்லா நோட்டு,புத்தகங்கள் வழங்கப்பட்டன.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சீனிவாச ராகவன்,உதவி தலைமை ஆசிரியர்கள் ஆ.இராமு, வெ.உமா மாதேஸ்வரி,பள்ளித் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
