கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு குண்டாஸ்
X
தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 06.09.2025 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் (22) என்பவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story