திருநங்கைகள் குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க ஆய்வு

திருநங்கைகள் குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க ஆய்வு
X
குமாரபாளையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் திருநங்கைகள் குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க ஒன்றிய பொறுப்பாளர் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தட்டாங்குட்டை ஊராட்சி வி.மேட்டூர் பகுதியில் தமிழக அரசால் திருநங்கைகளுக்காக வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பகுதியான மருத்துவர் உமா நகரில் வசித்து வரும் திருநங்கைகள் கலைஞர் கனவு இல்லத்தின் மூலம் வீடு கட்டி வருவதால் அங்கு அவர்களுக்கு போதிய மின்சார வசதி இல்லாததால் நடைபெற்று முடிந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் N.நாச்சிமுத்து முன்னிலையில் வட்டாட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள் அதன் அடிப்படையில் இன்று ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து மின்வாரிய அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மிக விரைவில் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிக்கு மின் கம்பங்கள் அமைத்து மின்சாரம் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.... உடன் கழக நிர்வாகி செல்வன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்..
Next Story