தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிலும் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் முதல் செட்டிகுளம் வழியில் இயக்கப்படும் மினி பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 5 கிலோமீட்டர் வழித்தடம் அதிகப்படுத்தி ஊருக்குள் சென்று பொதுமக்களை ஏற்றி வர வேண்டும் ஆனால் இந்த இரண்டு பேருந்துகள் ஓட்டுனர்கள் ஊரினுள் சென்று பொதுமக்களை ஏற்றுவது கிடையாது கொடுத்த வழித்தடத்திற்கு புறம்பாக பெரம்பலூர் முதல் செட்டிகுளம் மெயின் ரோட்டில் உள்ள பொதுமக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் மேலும் கொடுத்த நேரத்தில் பேருந்து இயக்குவது கிடையாது அவர்கள் நினைத்த நேரத்திற்கு மட்டுமே பேருந்தை இயக்கி வருகிறார்கள் மேலும் 15 ஆண்டுகளாக செட்டிகுளம் முதல் பெரம்பலூர் வழியா செல்லும் 15 ஆட்டோக்கள் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் சேவை செய்து அதில் வரும் வருமானத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்தை பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள் ஆனால் தற்போது இவர்கள் அத்துமீறி பேருந்தை இயக்குவதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மினி பேருந்து ஓட்டுநர் நடத்துனர் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதும் தாக்குவதற்காக முயற்சி செய்வதும் தொடர்கதையாக உள்ளது எனவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இரண்டு பேருந்துகள் நடத்தினர் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் எந்த இடையூறு இல்லாமல் இயக்க வேண்டும் என்பதே ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

