திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் தனியார் கல்வி நிறுவனங்களாகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த பிரபு என்பவர் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு

X
Tiruchengode King 24x7 |6 Oct 2025 10:08 PM ISTமல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த எலக்ட்ரீசியன் வேலை செய்த ராமாபுரம் கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு 37 என்பவர் இன்றுகல்வி நிறுவன வளாகத்தில் பணியில் இருந்த போது மதியம் சுமார் 12.30 மணி அளவில்உயிர் இழந்தார் சம்பவம்குறித்துமல்லசமுத்திரம் போலீசார் விசாரணை
திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ராமாபுரம் ஊராட்சி கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காளியண்ணன் என்பவரது மகன்பிரபு 37 திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகி மனைவியை பிரிந்து இவரது தந்தை இறந்து போன நிலையில் அவரது இரண்டாவது மனைவி சாந்தாமணி 67 அம்மாவுடன் வசித்து வருகிறார். இவர் மல்லசமுத்திரம் மகேந்திரா கல்வி நிறுவனவத்தில் ஒப்பந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம் போல் பணிக்குச் சென்றவர் மதியம் 12.30 மணி அளவில் பணி செய்யும் போது ரிட்டன் சப்ளை கரண்ட் வந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானர். இதுகுறித்துகல்வி நிறுவனத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரபு இறந்து போனதை அறிந்த பிரபுவின் சிறிய தாயார் சாந்தாமணி மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மல்லசமுத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்து போன பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
