சங்கரன்கோவிலில் நகை பறித்த இரண்டு திருநங்கைகள் கைது

சங்கரன்கோவிலில் நகை பறித்த இரண்டு திருநங்கைகள் கைது
X
நகை பறித்த இரண்டு திருநங்கைகள் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மார்க்கெட் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் வடக்குபனவடலி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் மருதநாயகம் (வயது 38) என்பவரை ஆசை வார்த்தைகள் கூறி இரண்டு திருநங்கைகள் தனியாக அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரின் கழுத்தில் கிடந்த தங்க செயினை கழற்றிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து அவர் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து எடுத்துக் கூறி புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பெண் உதவி ஆய்வாளர் பிரபா மற்றும் காவலர்கள் தப்பி ஓடிய 2 திருநங்கைகளை தேடி வந்தனர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் நகை எடுத்துச் சென்ற தளவாய்புரத்தைச் சேர்ந்த இரண்டு திருநங்கைகள் அபர்ணா மற்றும் இசை ஆகிய இரண்டு திருநங்கைகளையும் போலீசார் கைது செய்து கிடுக்கு புடி விசாரணை நடத்தினர் அப்போது நகையை எடுத்து தப்பி ஓடும்போது எங்கே ஏதோ ஒரு இடத்தில் நகை விழுந்ததாகவும் எந்த இடத்தில் விழுந்து என்று தெரியவில்லை என கூறியதாக விசாரணையில் கூறப்படுகிறது. இதை அடுத்து இரண்டு திருநங்கைகளையும் சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் இதுபோன்ற சம்பவங்களில் இனி யாரும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கரன்கோவில் காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
Next Story