முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்

முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்
X
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மேல்கரைப்பட்டி நால்ரோட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, ராஜம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி குமாரக்கவுண்டன்புதூரில் பொதுப் பணித்துறையின்கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், மாநில நிதிக்குழு மான்யத்தின்கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மேற்கு பகுதி முதல் தெற்கு பகுதி வரை கட்டப்பட்ட சுற்றுச்சுவர், மாநில நிதிக்குழு மான்யத்தின்கீழ் ரூ.19.65 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் வடக்கு பகுதி முதல் கிழக்கு பகுதி வரை கட்டப்பட்ட சுற்றுச்சுவர், கோவிலம்மாபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, கந்தப்பகவுண்டன் வலசில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, கொத்தயம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை என மொத்தம் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தாளையூத்து - கள்ளிமந்தையம் சாலை – பனம்பட்டி பிரிவு பெருமாள்கோவில் முதல் நாச்சியப்பக்கவுண்டன்வலசு சாலை வரை ரூ.46.98 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி குமாரக்கவுண்டன்புதூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் உணவுக்கூடம் அமைக்கும் பணி, முத்துநாயக்கன்பட்டி வயலூர் – கடத்தூர் பஸ் ஸ்டாப் முதல் மேற்கு மிடப்பாடி குமாரபாளையம் சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.43.80 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, கொழுமங்கங்கொண்டான் – முத்துநாயக்கன்பட்டி சாலை சின்னப்பன் தோட்டம் முதல் குண்டுப்பாறை வரை ரூ.36.63 இலட்சம் மதிப்பீட்டிலும், குடுண்டுப்பாறை முதல் மின் அலுவலகம் வரை ரூ.77.68 இலட்சம் மதிப்பீட்டிலும், மாரிமுத்து தோட்டம் முதல் மின் அலுவலகம் கொழுமங்கொண்டான், பேச்சிநாயக்கனூர் சாலை வரை ரூ.58.22 இலட்சம் மதிப்பீட்டிலும் முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள், புஷ்பத்தூர் அனுராகவி மில் முதல் நல்லூர் விநாயகர் கோவில் வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.65.29 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி சாலை முதல் போதுப்பட்டி வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.51.76 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி ஆதிதிராவிடர் காலனி மயானம் முதல் புஷ்பத்தூர் மிடப்பாடி சாலை வழியாக கற்பக விநாயகர் பேப்பர் மில் வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, மிடப்பாடி கே.எஸ்.இ சாலை ராஜேந்திரன் தோட்டம் முதல் தெற்கு தங்கராஜ் தோட்டம் வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.34.39 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள், மிடப்பாடி – வன்னியர்வலசு சாலை முதல் வன்னியர்வலசு சாமிநாதபுரம் சாலை வரை ரூ.55.30 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளயில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.74.22 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிகள், கோவிலம்மாபட்டி – சின்னகன்னிமார் கோவில் முதல் கொழுமங்கொண்டான் சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.46.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி, போடுவார்பட்டி – கொங்கப்பட்டி சாலை முதல் சின்னவல்லக்குண்டாபுரம் சாலை வரை நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் தார்சாலை தரம் உயர்த்தும் பணி, போடுவார்பட்டி ஆதிதிராவிடர் காலனி சாலை ரூ.38.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கொத்தயம் – போடுவார்பட்டி சாலை முதல் சின்னவல்லக்குண்டாபுரம் சாலை வரை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.30.20 மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, 16 புதூர் முதல் பெரியகோட்டை சாலை வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.72.71 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, கூத்தம்பூண்யானவலசு மெயின்ரோடு முதல் பெருமாள்மலை வரை முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, வல்லக்குண்டாபுரம் – விராகிரிக்கோட்டை சாலை வரை முதல்வரின் கிராமச்சாலை மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.42.97 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கூத்தம்பூண்டியான்வலசு முதல் மேற்கு தீர்த்தாக்கவுண்டன்வலசு சாலை வரை ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணிகள் என மொத்தம் ரூ.11.41 கோடி மதிப்பிட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story