நிலம் அபகரிப்பு தொழிலாளி கோரிக்கை மனு

பென்னாகரம் அருகே  வழி பிரச்சனையால் பெண் மீது தாக்குதல், கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் மனு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஅள்ளியை சேர்ந்தவர் தங்கராஜ், இவர் பெங்களூரில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இவருக்கு தாத்தா வழியில் பாத்தியப்பட்ட நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் பங்காளிகள் இவரது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வாரம் வீட்டிற்க்கு செல்லும் பொது வழி சாலையை ஜே.சி.பி. மூலம் சாலையின் நடுவே குழி வெட்டியும்,வைக்கோல் போர் வைத்தும் நடந்து செல்ல முடியாத அளவிற்க்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.இதனை தடுக்க சென்ற தங்கராஜின் மனைவி காவியாவை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிரிச்சிக்காக சேர்த்துள்ளனர் இது குறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், எனவே தனக்கு உரிய நீதி வேண்டும் என கோரி நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story