கடையாலுமூடு : பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்

கடையாலுமூடு : பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்
X
டிரைவர் கைது
குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே நெட்டா பகுதியை சேர்ந்தவர் ரவி மனைவி சுமா (54).  இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சஜித் (43)என்பவருக்கும் ரவிக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக ரவி கடையாலுமூடு காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அதன் பின் நடந்த விபத்து ஒன்றில் ரவி படுகாயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.       இதற்கிடையே புகார் மற்றும் முன் விரோதம் காரணமாக சஜித், சுமாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் சுமா வீட்டு முன்பு நிற்கும் போது,  அங்கு வந்த சஜித் கோபத்தில் சுமாவை பிடித்து கீழே தள்ளி தகாத வார்த்தைகளால் திட்டி உன்னையும் கணவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுமா கடையாலுமூடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிரைவர் சஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story