கொடுத்த நகையை கேட்டதால் தாக்குதல் – பெண் மயக்கம், வீடியோ வைரல்!

கொடுத்த நகையை கேட்டதால் தாக்குதல் – பெண் மயக்கம், வீடியோ வைரல்!
X
பெண்ணுக்கு நடுரோட்டில் தாக்கிய நபர் வீடியோ வைரல்.
கோவை சிவானந்தா காலனி ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி மேரி தள்ளுவண்டி கடை நடத்தி வருகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் கேன் வியாபாரம் செய்தபோது, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு மருத்துவ அவசரத்திற்காக ஒரு பவுன் நகையை கொடுத்து பணம் எடுக்கச் சொன்னனர். ஆனால் அதன் பின்னர் விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். நேற்று ரத்தினபுரியில் அவரை கண்ட ஸ்டாலின் தம்பதியினர் நகையை கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த விக்னேஷ் ஸ்டாலினையும் மேரியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மேரி தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story