கோவை: திமுக அரசு ஆளுநர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது - மத்திய அமைச்சர் எல். முருகன் !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனை புதிதாக பொறுப்பு பெற்ற பாஜக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்கிறது என்றும், ஆளுநர் திமுக ஊழல்களுக்கு தடையாக இருப்பதால் அவரை குறிவைத்து தவறான கோப்புகளை அனுப்பி பிரச்சனை செய்கிறது என்றும் கூறினார். கரூர் சம்பவம் துயரமானது; அதில் அரசியல் கருத்து கூற விருப்பமில்லை, என்டிஏ அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், புதிய தலைமுறை, ஜனம் போன்ற ஊடகங்களை அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்குவது எமர்ஜென்சி காலத்தை நினைவூட்டுகிறது. அரசு உண்மையைச் சொல்வோருக்கு எதிராக ஒடுக்குமுறையை பின்பற்றுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Next Story



