ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்
X
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்... மற்றொரு ரயிலில் வந்த டிரைவர் ரயிலை நிறுத்தி காயம் அடைந்தவருக்கு உதவி
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 50. இவர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து குழந்தை வேலப்பர் கோவில் பகுதியில் தவறி கீழே விழுந்தார். இதில் பின்னந்தலையில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். ஒன்பது முப்பது மணி அளவில் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக சென்றது. காயமடைந்து ஒருவர் விழுந்து கிடப்பதை கண்ட டிரைவர் ரயிலை நிறுத்தினார். பின்பு ரயிலில் இருந்தவர்கள் இறங்கி சென்று ரயில் டிரைவர் உட்பட பயணிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் ஸ்டெரச்சர் மூலம் அனுப்பி வைத்தனர். ரயிலை நடு வழியில் நிறுத்தி ஆபத்தான நிலையில் இருந்த நபருக்கு ரயில் டிரைவர் உதவிய சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.
Next Story