கோட்டூரில் விவசாயிகள் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெண்கள் விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம பகுதிகளில் 100 நாள் வேலை வழங்க வேண்டும்,வேலை வழங்க முடியாவிட்டால் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்கள் வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story

