பள்ளபாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
பள்ளபாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஜாதி சான்று பட்டா மாற்றம் பென்ஷன் பெறுதல் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும் ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக இந்த முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அறிவிப்பு செய்ததன் அடிப்படையில் பள்ளபாளையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த முகாமில் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொண்டனர். அவ்வாறு தீர்வு காணப்பட்ட மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Next Story





