எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரப் பயணம் வேலூர் ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
Tiruchengode King 24x7 |7 Oct 2025 3:27 PM ISTதிருச்செங்கோட்டில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை கூட்டம் திருச்செங்கோடு பரமத்தி சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா திடலில் இன்று மாலை நடைபெற உள்ளது அந்த பகுதியில் கூட்டம் நடத்ததேவையான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ள திருச்செங்கோடு வருகை தருகிறார். கடந்த மாதம் 21 ஆம் தேதி மற்றும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஆகிய தேதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இரண்டு முறை இந்த பரப்புரை மழை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து நாளை மாலை 5 மணி அளவில் திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் விவேகானந்தா திடலில் இந்த பரப்புரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பரப்புரை வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி பரப்புரை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த திடலில் சுமார் 25,000 மேற்பட்ட மக்கள் நிற்பதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செங்கோடு பரமத்தி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் நாளை மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்து செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விசாரித்த போது நகரின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வருகிற வாகனங்கள் நகருக்குள் வராமல் அனைத்து வாகனங்களும் பைபாஸ் ரோடுகள் வழியாகவே மைதானம் அருகில் செல்லவும் வாகனத்தில் வருபவர்களை மைதானம் அருகே இறக்கி விட்டு விட்டு கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஈரோடு ரோட்டில் இருந்து வருகிற வாகனங்களைசுற்றுவட்ட சாலை வழியாக கரட்டுப்பாளையம் பகுதியில் வந்து சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் மைதானத்திற்கு அருகிலேயேவாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சுமார் 10,000 பேர் முதல்12 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப் படுவதாகவும் அதற்குரிய வகையில் போலீஸ் பாதுகாப்பு செய்யப் பட்டிருப்பதாகவும் மாலை சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மல்லசமுத்திரம் சங்ககிரி ரோடு திருச்செங்கோடு நகரப்பகுதி வழியாக வேலூர் ரோடு வந்து வேலூர் ரோடு வழியாக மைதானத்தை அடைய இருப்பதாகவும் மைதானத்தில் அவர் வரும் வாகனத்தில் இருந்து பேச இருப்பதாகவும் அவர் வந்து திரும்பும் வரை வழக்கமான போக்குவரத்து பாதை மாற்றி அமைக்கப் பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
Next Story



